Show all

மோடி உள்நாட்டை மறந்துவிட்டார். ராகுல் சரமாரி புகார்

வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் மோடி உள்நாட்டை மறந்துவிட்டார். ராகுல் சரமாரி புகார். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் தமது சொந்த தொகுதியான அமேதியில் 2-வது நாளாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அவர், பிரதமர் மோடி மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலின் போது வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வருவதாக வாக்குறுதி அளித்த மோடி, அதனை செய்து காட்டினாரா என கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என மோடி கூறினாரே அந்த பணம் வந்துவிட்டதா என கேள்வி எழுப்பினார். இதுபற்றியெல்லாம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் பா.ஜ.க.வினர் பேசவிடாமல் தடுப்பதாக ராகுல் புகார் தெரிவித்தார்.

மேலும் பேசிய ராகுல் ஒரு பதவி ஒரே ஓய்வூதியம், புனே திரைப்படக் கல்லூரி போன்ற போராட்டங்களையும் மத்திய அரசு நசுக்க முயலுவதாக குற்றஞ்சாட்டினார். ஆர்.எஸ்.எஸ் கொள்கையை ஏற்க மறுக்கும் அனைவரையும் அடக்கி ஆளும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக புகார் கூறியுள்ளார். வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் மோடி, உள்நாட்டை மறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.