Show all

எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறை ரத்து

8ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்ய உள்ளது. மத்திய அரசு புதிதாக அமைத்துள்ள சி.ஏ.பி.இ. என்னும் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், கல்வித்துறை செயலாளர்கள், கல்வியாளர்கள், சி.ஏ.பி.இ. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி,8ஆம் வகுப்பு வரையில் மாணவர்களை பெயில் ஆக்குவதில்லை என்ற கொள்கையை ரத்து செய்வதற்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். 8ஆம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்குவதில்லை என்ற கொள்கை, கல்வி கற்றலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதில் மாநில அரசுகளிடமிருந்து எழுத்துப்பூர்வமான கருத்து கேட்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.