Show all

வாழ்க்கையும் வரலாறும்.

வாழ்க்கையிலே ழ் என்கிற சிறப்பு ஒலிப்பு இருக்கிறது. வரலாற்றிலே ர என்கிற குறிப்பு ஒலிப்பு இருக்கிறது என்கிற பீடிகையோடு வாழ்க்கையில்- குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐவகை வாழ்க்கை முறையைக் கொண்டாடிய தமிழ் குறித்தும், வரலாற்றில்- ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று நாடோடிய ஆரியர் குறித்தும் பேசுவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

14,மாசி,தமிழ்த்தொடராண்டு-5125: 

1. நிலவாழ் உயிரிகள் தோற்றம் பெற்றது, இம்மைய மலை என்கிற இமயமலை. அதில் நாம் பேசப்போகிற வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் சொந்தமான மனிதனும் அடக்கம்.

2. உலகின் ஒட்டுமொத்த மனிதர்களையும் இரண்டாகப் பிரிக்கலாம். நள்ளிரவை நாள்தொடக்கமாக கொண்ட இமயத்தில் இருந்து இடமாகப் பயணித்தவர்கள் ஒன்று.

3. அதிகாலை ஞாயிற்று உதயத்தை நாள் தொடக்கமாக கொண்ட இமயத்தில் இருந்து வலமாகப் பரவியவர்கள் இரண்டு.

4. நடுவாக அமைந்த இமயத்தின் வலமாகப் பரவியவர்கள் தாங்கள் என்பதாக- தம் மண்ணை நாவலந்தேயம் (நா வலந் தேயம்) என்று கொண்டாடியது தமிழ்இனம். 

5. கடல் அமைந்த நாடுகளுக்கு எல்லாம் கப்பல் கட்டி வணிகமாற்றிய தமிழ்இனம்- தன் மண்ணை நாவலந்தேயம் என்று அயலவருக்கு ஒலித்துக் காட்டிய போது, அவர்களால் ந்தேயா என்றுதான் ஒலிக்க முடிந்தது. அதனால் நாவலந்தேயம் ந்தேயா என்று அயலவர் மொழியில் எழுதப்பட, தமிழில் இந்தியா ஆனது. இந்தியாவின் வேர் நாவலந்தேயம் என்கிற தமிழ்ச்சொல் ஆகும்.

6. இரவின் ஒற்றையான இருட்டு என்கிற இடத்தைக் கொண்டாடியது அயல்.

7. நாளின் ஆறு பொழுதுகளான முதலாவது பத்து நாழிகையைக் காலை என்றும் இரண்டாவது பத்து நாழிகையை நண்பகல் என்றும், மூன்றாவது பத்து நாழிகையை ஏற்பாடு என்றும் நான்காவது பத்து நாழிகையை மாலை என்றும், ஐந்தாவது பத்து நாழிகைளை யாமம் என்றும் ஆறாவது பத்து நாழிகையை வைகறை என்றும் நாளின பல்வேறு பிரிவுகளான காலத்தைக் கொண்டாடியது தமிழ்.

8. முதலெனப்படுவது இடமும் காலமும் என்று தெரிவித்து இரண்டின் அடிப்படை முதல் என்றது தமிழ்.

9. இரண்டல்ல என்கிற பொருளில் அத்வைதம் என்று முதலை ஒன்று என்றது அயல்.

10. நள்ளிரவைக் கொண்டாடிய அயல், பேரளவாக கொண்டாடி வருகிற ஒலிப்பு அந்த ராவில் இருக்கிற ர.

11. இமயத்தில் இருந்து இடமாக பயணித்த மனிதப்பிரிவு சந்தித்த மண் பகுதிகள் அனைத்திலும் ர இடம்பெறும். எடுத்துக்காட்டு உருசியா, ஈரானியம், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா.

12. ஈரானிய மண்ணில் இருந்து கிளம்பிய பேரளவு ஆண்கள் இமயமலைக் கணவாய்கள் வழியாக வட நாவலந்தேயம் வந்தடைந்த போது அவர்கள் அந்த பகுதிக்கு பெயரிட்ட பாரதம் என்கிற பெயரில் ர உண்டு. தங்களை ஆரியர் என்று தெரிவித்துக் கொண்டதில் ர உண்டு.

13. வட நாவலந்தேயத்து தமிழர்கள்- ஈரானியத்தில் இருந்து வந்தவர்கள் ஆடை நாகரிகம் அறியாத காரணம் பற்றி அவர்களைப் பேரம்மணர் என்றனர்.

14. தமிழர் தலைப்பிட்ட பேரம்மணர் என்பதைப் பிராமணர் என்று ஆக்கிக் கொண்டதிலும் ர ஒலிப்பு இருக்கிறது.

15. பிராமணர்களின் நான்கு வேதங்களிலும் ரிக், யாசூர், சாமர், அதர்வண் என்று ர இருக்கிறது.

16. அவர்கள் உருவாக்கிய காப்பியம் ராமயணத்தில், அவர்களின் பெருங்கதையாடல் மகாபாரதத்தில் ர ஒலிப்பு இருக்கிறது.

17. இந்திய விடுதலையை தமதாக்கிக் கொண்ட பாரதிய ராஷ்டிரிய காங்கிரசின் மூன்று சொற்களிலும் இரவைக் கொண்டாடும் ஒலிப்பான ர இருக்கிறது.

18. இன்றைக்கு ஆட்சியில் இருக்கிற பாரதிய ஜனதாவிலும், அதை வழி நடத்தும் ராஷ்ட்ரிய ஸ்வம் சேவக் சங்கிலும் ர ஒலிப்பு இருக்கிறது.

19. காங்கிரசுக்கு முடிவுரை எழுதும் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட சதியான ராஜிவ் கொலையில், அதை முன்னெடுத்த உளவாளி அமெரிக்காவில், அதை முறைப்படுத்திய ராவில், அதை நிருவாகப்படுத்திய சாந்திராசாமி, சுப்பிரமணிய சாமியில், அதைச் சாதித்து முடித்த சிவராசனில், அதில் பலிகாடாவக்கப்பட்டு அழிக்கப்பட்ட பிரபாகரனில், கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட ஈழதமிழினத்தின் ஒன்னரை இலட்சத்தில் ர ஒலிப்பு பொருந்தியுள்ளது.

20. தொடர்ந்து இந்திய ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முனைந்துள்ள பாரதிய ஜனதாவின் ராமர் அரசியலில் ர ஒலிப்பு பொதிந்துள்ளது.

21. ர என்கிற எழுத்தை தங்களுக்கானதாக கடவுளில் பதிவிட்டு சாதித்து வருகின்றனர் பிராமணியர்.

22. ர ஒலிப்புள்ள தமிழர் என்கிற தலைப்பிலும் அவர்கள் தங்களை இணைத்துக்கொண்டு நம்மை வீழ்த்துகிறார்கள்.

23. தமிழர் என்று சொன்னால் ஆரியர்கள் தங்களையும் அந்தத் தலைப்பில் இணைத்துக் கொள்வார்கள் ஆகவே திராவிடர் என்கிற தலைப்பை முன்னெடுப்போம் என்றார் பெரியார்.

24. அந்தத் திராவிடர் என்கிற சொல்லிலும் ஆரியர்கள் தங்களை இணைத்துக் கொண்டதுதான் வரலாறு.

25. திராவிடர் என்பதை பிழையானது என்று நிறுவி- நாம் தமிழர் என்கிறார் சீமான்.

26. நாம் தமிழருக்குள்ளும் பிராமணியர் இருக்கிறார்கள் என்றும், பாரதிய ஜனதா கட்சியின் ஆ பிரிவுதான் நாம் தமிழர் என்றும் பேசப்படுவது ஓங்கி ஒலிக்கப்பட்டே வருகிறது.

27. தங்களைத் தமிழர் என்றும், திராவிடர் என்றும் நிறுவிக் கொள்கிற ஆரியர் தமிழகம் என்பது தங்களை உள்ளடக்கியது என்று கொண்டாடுகிறார்கள்.

28. நாம் தனித்துவமானவர்கள் என்று நிறுவ- தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழ்நாடு, தமிழ்இயல், தமிழ்வரலாறு என்பனவற்றைத் தூக்கிப்பிடிப்போம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,901.
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.