Show all

செயலலிதா ஆத்மா மகிழ்ச்சி கொள்ளுமாம்! பாமக அதிமுகவுடனான கூட்டணியில் 7ஐ அள்ளிச்சென்ற நிலையில், பாஜக 5ஐ தள்ளிச் செல்வதில்

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தின் 38 பாராளுமன்றத் தொகுதிகளை செயலலிதா அவர்கள் தலைமையில் வென்றெடுத்த கட்சியான அதிமுக: தமது தோல்வியில் உறுதியான நம்பிக்கையோடு, வேறு வகையான வெற்றியைத் தேடி, கூட்டணி பெயரில் ஒரு தொகுதி வைத்திருந்த பாமகவுக்கு ஆறு தொகுதிகள் தாரை வார்த்தது. மீதமுள்ள 32 தொகுதிகளில் தற்போது ஒரு தொகுதி வைத்திருந்த பாஜகவுக்கு நான்கு தொகுதிகளை தாரை வார்த்து தற்போதைக்கு மீதி 28 தொகுதிகளை கைவசம் வைத்துள்ள நிலையில் தேமுதிகவின் வரவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை முதல்வர் பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர் செல்வம் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து பியூஷ்கோயல் நிருபர்களிடம் பேசுகையில்: பாhரளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். இது போல் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் நாற்பதும் நமதே என வெற்றி பெறுவோம். இந்தக் கூட்டணியால் செயலலிதா ஆத்மா மகிழ்ச்சி கொள்ளும். இந்த கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,068.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.