Show all

தேர்தலில் தமிழக மக்கள் அடிப்பார்களா ஆப்பு, அளிப்பார்களா வாக்கு! ஆனால் கூட்டணியில் பாமகவிற்கு வரலாறு காணாத வெற்றி

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அம்மாடியோவ் இத்தனை தொகுதிகளா பாமகவிற்கு? ஆம். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாமகவுக்கு ஒரு மேலவை உறுப்பினரும் அதிமுக தரப்பில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏற்கனவே அனைவரும் எதிர்பார்த்தபடியே பாமக அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் அதிமுக இன்று கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர், மற்றும் அமைச்சர்கள் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் 4 தொகுதிகள் மட்டுமே பாமகவுக்கு ஒதுக்கப்படும் என்ற தகவல்கள் வந்த நிலையில், ஒரேயடியாக 7 தொகுதிகளை அதிமுக வழங்கியுள்ளது. கூடுதலாக ஒரு மேலவை உறுப்பினரும் தரப்படுகிறது.

பாமக, திமுக பக்கம் போய்விடாமல் இருக்கவே 4 தொகுதிக்குப் பதில் 7 என தாராளத்தை காட்டி மடக்கி விட்டது அதிமுக. 

38 தொகுதிகள் அதிமுக வென்ற தொகுதிகள் ஒரு தொகுதி  பாமக வென்ற தொகுதி. மேலும் ஆறு தொகுதிகளை அதிமுக பாமகவிற்கு தாரை வார்க்கிறது என்றால் தங்களுக்கான வெற்றியில் எந்த அளவிற்கு நம்பிக்கை இருக்கிறது என்பதற்கு இதுவே அளவு கோல்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,068.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.