Show all

பாமக, பாஜக, தேமுதிக, அதிமுக ஆளாளுக்கு ஒரு திட்டம்! கூட்டணி முடிவாயிருச்சு; பணத்திற்கு

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலில் பாஜக நிதிச் செலவுகளை இரு கல்வித் தந்தைகள்தான் கவனிக்கப் போவதாக பரபரக்கிறது தேர்தல் களம்.

மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி, உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகின்றன. இதில் அதிமுக வேட்பாளர்களின் தேர்தல் செலவை பற்றி பெரிதாக கவலைப்பட தேவையில்லை.

அமைச்சர்களின் உறவினர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு அதிமுக தலைமை, வேட்பாளர்தகுதி தர உள்ளதால், அவர்களே பணத்தை பாதாளம் வரை பாய்ச்சுவார்கள். 

ஆதனால் பாஜக வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை இரண்டு கல்வித்தந்தைகள் தலையில் கட்டிவிட்டாராம் அமித்ஷா. பாஜக கூட்டணியில் உள்ள பாரிவேந்தரும், ஏ.சி.சண்முகமும் சரிபாதியாக தேர்தல் செலவு செய்ய ஒத்துக்கொண்டார்களாம்.

பாமகவை பொறுத்தவரை தேர்தல் செலவுக்கு அதிமுக தரப்பில் இருந்து சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதால் அந்தக் கட்சியும் தெம்பாகவே உள்ளது. இதில் தேமுதிக நிலைதான் பரிதாபமாக உள்ளதாம்.

தேமுதிக வேட்பாளர்களின் செலவை ஏற்க அதிமுக ரொம்பவே தயங்குகிறதாம். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் செலவு செய்து தேமுதிகவை எதிர்க்கட்சியாக கொண்டு வந்தோம், அந்த நன்றியை மறந்து அம்மாவிடமே வாயாடினார் விஜயகாந்த். அதனால் இந்த முறை செலவுக்கெல்லாம் நயா பைசா கொடுக்கக் கூடாது என மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பன்னீரிடம் வலியுறுத்துகிறார்களாம்.

மேலும், விஜயகாந்த் கருத்துப் பரப்புதலுக்கு வராத நிலையில், தேமுதிகவுக்கு செலவு செய்வது வீண்வேலை எனவும் அவர்கள் கூறுகிறார்களாம். இதைக் கேள்விப்பட்டு தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள் நொந்து போயிருக்கிறார்களாம். அதிமுக அளிக்கும் 4 தொகுதிகளிலும் போட்டியிட வைக்க பசையுள்ள வேட்பாளர்களைத் தேடி வருகிறதாம் தேமுதிக தலைமை. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,068.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.