Show all

குடையில் திருக்குறள்!

புதுச்சேரியில் நடந்த உலக திருக்குறள் சாதனையாளர்கள் மாநாட்டில், குடையில் திருக்குறள் எழுதிஅசத்தி, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றார், திருவண்ணாமலையை சேர்ந்த தமிழ் ஆசிரியை. 

28,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: புதுச்சேரியில் உலக திருக்குறள் சாதனையாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டனர். திருக்குறள் மாநாட்டையொட்டி, விழா நடைபெற்ற அரங்கின் வெளியில் திருக்குறளை எதிர்காலத்திற்கு முன்னெடுக்கும் வகையில் பல்வேறு பொருட்களில் திருக்குறள் எழுதி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

இதில் திருவண்ணாமலை ஆரணியை சேர்ந்த தமிழ் ஆசிரியர் உமாராணி என்பவர் கடந்த ஓர் ஆண்டாக 1330 குறள்களையும் வௌ;வேறு பொருட்களில் எழுதி சாதனை படைத்து வருகிறார். குறிப்பாக அவர் சிறிய விதைகளில் ஒவ்வொரு விதையிலும் ஒவ்வொரு குறளாக 1330 குறள்களையும் எழுதி அசத்தியுள்ளார்.

அதேபோல் குடையின் மேலும், காய்களிலும், வளையல்கள், சிறிய மணிகளிலும் 1330 திருக்குறளையும் எழுதி அசத்தியது மட்டுமல்லாமல் திருக்குறள் தொடர்பான நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அங்கு தான் பல்வேறு பொருட்களில் எழுதிய திருக்குறளை காட்சிப்படுத்தி வருகிறார். இந்தப்பாட்டிற்கு இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இதுகுறித்து உமாராணி கூறும்போது, திருக்குறளை அழியாமல் பாதுகாக்கும் வகையில் என்னால் முடிந்த சிறிய முயற்சியாக கடந்த ஓராண்டாக இவற்றைச் செய்து வருகிறேன். குடைகளிலும், விதைகள், மணிகள், வளையல்கள், விதைகள் போன்றவற்றில் 1330 திருக்குறளையும் எழுதி வருகிறேன். இதனால் எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்து வருகிறது. அடுத்த தலைமுறைக்கு திருக்குறளை எடுத்துச் செல்லும் என் நோக்கமும் நிறைவேறுகிறது என்றார் பெருமிதமாக.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,550.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.