Show all

சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றி அரசாணை வெளியிடாதது ஏன்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஈரோடு, வீரப்பன்சத்திரம் அருகே சிக்கய்ய நாயக்கர் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி கடந்த 19ஆண்டுகளாக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகிறது. இக்கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்கக் கோரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலகட்ட போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இக்கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோட்டில் 22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (07.09.2017) இல் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்க மாநில துணைத் தலைவர் பசுபதி தலைமை வகித்தார்.

முன்னாள் மாநிலத் தலைவர் செந்தாமரை, கிளைத் தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கல்லூரி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.