Show all

சரக்கு மற்றும் சேவைவரிமூலம் குவியும் கோடிகள்மூலம் மக்களுக்கு ஏதும் புதிய பயனுண்டா

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநில நிருவாகத்தில், நடுவண் அரசு நிருவாகத்தில் என்றிருந்த அனைத்து வரிகளையும் ஒருங்கிணைதது சரக்கு மற்றும் சேவைவரி என்று நாட்டின் ஒட்டு மொத்த வரி விதிப்பு உரிமையை நடுவண் அரசு பறித்துக் கொண்டது.

நடப்பு ஆண்டு ஆனி மாத இறுதியில் (சூலை) இந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தது. ஆனி, ஆடி மாதத்தில் (சூலை); இந்த வரியின் மூலம் அரசுக்கு 94,063 கோடி ரூபாயும், ஆடி, ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட்) 90,669 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்தன.

அவ்வகையில் ஆவணி, புரட்டாசி மாதம் (செப்டம்பர்) சரக்கு மற்றும் சேவைவரி மூலம் ரூ.92,150 கோடி கிடைத்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சரக்கு மற்றும் சேவைவரி மூலம் இந்தியா முழுவதும் 42.91 லட்சம் பேரிடமிருந்து ரூ.92,150 கோடி வசூலாகியுள்ளது. நடுவண் சரக்கு மற்றும் சேவைவரியாக ரூ.14,042 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவைவரியாக ரூ.21,172 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைவரி ரூ.48,948 கோடி கிடைத்துள்ளது. ரூ.7,988 கோடி ரூபாய்க்கு இழப்பீட்டுத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவைவரி பதிகைக்காக 06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 வரை (23.10.2017) 42.91 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-சரக்கு மற்;றும் சேவை வரி வருமானம் மாநிலத்திற்குரியவைகள் சரியாகப் பகிர்ந்தளிக்கப் படுகிறதா? சரக்கு மற்றும் சேவைவரி மூலம் கிடைக்கும் வருமானத்தை மக்களுக்கு கூடுதல் சேவையாகக் கிடைக்கச் செய்வதற்கெல்லாம் திட்டம் ஏதும் இருக்கிறதா என்பதே மக்கள் கேள்வியாக இருக்கிறது?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.