Show all

நடத்தப் பட்ட வருமானவரிச் சோதனைகள் முடிவு எங்கே! தேவைகளுக்கேற்ப சோதனைகளா: மு.க.ஸ்டாலின்

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் பாஜகவால் கால் மட்டுமல்ல, கையை கூட ஊன்ற முடியாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், சங்கரன் கோவிலில் திமுக பிரமுகரின் இல்லத் திருவிழாவில் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது ஸ்டாலின்,

தமிழகத்தில் இதற்கு முன் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைகளின் தற்போதைய நிலவரம் என்ன ஆனது என்ற தகவலே இல்லை. என்ன செய்தாலும் சரி தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது. கால் அல்ல, கையை கூட பாஜக ஊன்ற முடியாது.

இன்று ஆளுங்கட்சியை விட மக்கள் திமுகவைதான் திட்டுகிறார்கள், ஏன் இந்த ஆட்சிக்கு இன்னும் முடிவுகட்டவில்லையென்று. இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,612

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.