Show all

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் வைகோ விடுதலை

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் வைகோவுக்கு விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கினர். கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை பாரிமுனையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ மீது வழக்கு பதியப்பட்டது. விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது கியூ பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பின்னர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது வழக்கு பதியப்பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி அருள்முருகன் இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி வைகோவை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.