Show all

இன்றையகுளிர்! ஓ சங்ககாலத்தில் வாழ்கிறோமோ; காவிரியின் குறுக்கே அணைகட்டி வளம் தேக்கிய கரிகாலன் அவர்களைக் கண்டு வருவோமா

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மார்கழி, தை முன்பனிக் காலம் என்று நம் தமிழ் முன்னோர் 5120 ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு வகுத்துக் கொடுத்துச் சென்றனர். நாம் இயற்கையை அழித்து நாம் வாழும் புவியைக் கன்னா பின்னா வென்று சூடேற்றி பருவ காலங்களையே மாறுபட்டு இயங்கச் செய்து கொண்டிருக்கிறோம்.

இன்று மார்கழி முதல் நாள் முன்பனி தொடங்கி விட்டமையை உணர்த்தும் விதமாக மாலையிலேயே குளிர்க்காற்று வீசத் தொடங்கியது, ஓ சங்க காலத்தில் வாழ்கிறோமோ! காவிரியின் குறுக்கே அணைகட்டி வளம் தேக்கிய கரிகாலன் அவர்களைக் காண கால எந்திரம் கிடைக்குமா? 

உதகையைப் போல மாறியுள்ளது சென்னை. பகலெல்லாம் குழந்தைகள் தெருவில் உற்சாகமாக விளையாடினார்கள் ; ஞாயிற்றுக் கிழமை வேறு ஆயிற்றா.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,003.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.