Show all

தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து வடித்த, படித்த கட்டுரை இதுதான்

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து வடித்த, படித்த கட்டுரை இதுதான்.

இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து விட்டு, ஆண்டாள் எழுதிய திருப்பாவையையும், நாச்சியார்கோவையையும் படித்துப் பார்த்தால் பாடலாசிரியர் வைரமுத்துவே ஆண்டாளுக்கான அரண். பாஜகவினர் ஆண்டாளுக்கான முரண் என்பது தெளிவாகப் புரிந்து விடும்.

ஆண்டாள் ஹிந்துத்துவவாதி அல்லள். அன்றைக்கு இருந்த வைஷ்ணவசமய வாத பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான போராளி. அவர்கள் தனது போராட்டத்திற்கு தன் தாய்த்தமிழோடு, திருமாலையே கருவியாக்கிக் கொண்டார் என்பதே உண்மை. அதையே பாடலாசிரியர் வைரமுத்து வடித்த இந்தக் கட்டுரை நமக்கு உணர்த்துகிறது.

ஆண்டாளுக்கு பாஜகவினர் உரிமை கொண்டாடுவது பட்டியில் இருந்து தப்பித்து வந்த வெட்டப்படப் போகிற ஆட்டுக்கு பட்டிக்காரன் உரிமை கொண்டாடுகிற கதைதான். அன்றைக்கு ஆண்டாளை சமய ஆணாதிக்கத்திற்கு உட்படுத்திய கூட்டத்தின் வாரிசுகள் தாம் இன்றைய இந்த பாஜக கூட்டம்.

இன்றைக்கும் தமிழர் யாரும் நுழைய முடியாத கோயில் கருவறைக்குள் அன்றே நுழைந்த தமிழ்ப் போராளிதான் ஆண்டாள்.

தமிழர்கள் இந்த எதிரிகளை கவனமாக புரிந்து கொள்வார்கள். இந்தக் கூட்டங்களுக்கு நோட்டாவிற்கு தரும் மரியாதை கூட தரமாட்டார்கள். வீணாய் போன ஊடகங்கள் தான் இந்தக் கூட்டத்தின் வாய்ச்சவடால்களுக்கும் களம் அமைத்துத் தருகின்றன.

மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் - விலங்குகள் - பறவைகள் - தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது.

புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.

மார்கழியின் அதிகாலை மனோகரமானது.
தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது;
தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது;
இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது;
கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது.
தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது.
"
இன்னுமா உறக்கம்!
எல்லே இளங்கிளியே!
எழுந்து வா வெளியே' என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது.
"
மார்கழி நீராட வாரீரோ மங்கையரே' என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது.

அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம்.
இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை.
இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.
பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு.

கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு.
"
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' என்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு.

"நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
திங்கள் மும்மாரி பெய்யும்;
நெல்லோடு கயல் உகளும்; பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுக்கும்;
வள்ளல் பெரும்பசுக்கள் வாங்கக் குடம் நிறைக்கும்,
ஆதலால் - மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்'
-
இப்படி உயிரியல் - வாழ்வியல் - சமூகவியல் என்ற மூன்றையும் முன்னிறுத்துவதாகப் பாவை நோன்பு பார்க்கப்படுகிறது.

வைணவத்தின் வளர்ச்சியில் திருப்பாவை செல்வாக்குற்றது
அல்லது
திருப்பாவை செல்வாக்குற்றதில் வைணவம் வளர்ந்தது.
தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் ஆறாம் - ஏழாம் நூற்றாண்டுகளைப் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியாது.

இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வு அந்த நூற்றாண்டுகளில்தான் இறையோடு இழைந்தது.
அறம்பற்றி நடந்த தமிழர் இறைபற்றி நடக்கத் தலைப்பட்டதும் இந்த நூற்றாண்டிலேதான்.
சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது.

இதன் தொடர்ச்சியை மௌவல் செய்திகள் ஆசிரியர் பக்கத்தில் காண்க.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.