Show all

அரசு பேருந்து கட்டணங்கள் 60விழுக்காடு வரை உயர்வு. இன்று முதல் அமல்

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்களை எடப்பாடி-பன்னீர் அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.

தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் 22 ஆயிரத்து 203 பேருந்துகள் உள்ளன. அன்றாடம் சுமார் 2 கோடி பேர் தமிழக அரசின் பேருந்து சேவையால் பயனடைந்து வருகின்றனர். ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் தற்போது குறைந்தபட்சமாக ரூ.3 உள்ள கட்டணத்தை ரூ.5ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வௌ;ளை பலகை, பச்சைப் பலகை மற்றும் சொகுசு வகை பேருந்;துகளின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்ப உயருகிறது. அதிகபட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக இருக்கும்.

இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நடுவண் அரசும் தமிழக அரசும் போட்டி போட்டுக் கொண்டு எரிபொருள் விலையையும், பேருந்துக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை தொடர்ந்து அல்லலுக்கு உட்படுத்தி வருகிறது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பேருந்து கட்டணங்கள், மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் இந்த பேருந்துகளின் கட்டண உயர்வால் கூலித் தொழிலாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

இந்தக் கட்டண உயர்வால் மற்ற பொருட்களின் விலை கடுமையாக ஏற வாய்ப்புள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,673

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.