Show all

நீட் தேர்வை புறந்தள்ள வாய்ப்பே இல்லை... அடித்து சொல்கிறார் தமிழிசை! பாஜகவையே அப்புறப் படுத்தினால்?

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் வேறு வாய்ப்பு உள்ளது. நீட் தேர்வு குறித்து தமிழக தலைவர்கள் தங்களது கருத்துகளை மாற்றிக் கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பே இல்லை, அரசியல் தலைவர்கள் மாணவர்களை ஏமாற்ற வேண்டாம்.

உயிரைக் காப்பாற்ற மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் தோல்வியால் உயிரை இழக்கக்கூடாது. நீட் தேர்வை பொருத்தவரை நேர்மறையாக எண்ண வேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

நடுவண் அரசில் பாஜகவும், தமிழக அரசில் பாஜக எடுபிடி எடப்பாடி அரசும் உள்ளவரை நீட் தேர்வை புறந்தள்ள முடியாது என்பது தமிழிசை சொல்வது போல நூறு விழுக்காடும் உண்மைதான். 

பாஜகவையும் இயந்திர வாக்குப் பதிவையும் அப்புறப் படுத்தினால் அப்புறம் அனைத்து மக்கள் போராட்டங்களும் வெற்றி பெறும். பாஜக மட்டுந்தாம் ஹிந்தி, ஹிந்துத்துவா, ஹிந்து ராஷ்டிரத்திற்கான ஒரே ஊழல் கட்சி. இந்தியாவில் மீதி இருக்கிற கட்சிகள் எல்லாம் வெறுமனே ஊழல் கட்சிகள் தாம். 

பாஜக சாதி (பார்ப்பனிய, மார்வாரி, பணியா) கார்ப்பரேட்டுகளிடம் மட்டுந்தாம் காசு வாங்கும். மற்ற கட்சிகள் எல்லாம் காசு வாங்குவதற்கெல்லாம் சாதி பார்க்காது. முதலில் நாம் அப்பறப் படுத்த வேண்டியது சாதிய ஏற்றதாழ்வுகளைத்தான். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,809. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.