Show all

நெஞ்சைப் பிழியும் சோகம்- குழந்தை தலைப்பகுதி துண்டானது! சுகாதார நிலையத்தில் இரவு மருத்துவர் இன்மை காரணம்

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கூவத்தூர் தொடக்க சுகாதார நிலையத்தில் சுக பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர் இல்லாததால் செவிலியரே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் தொடக்க சுகாதார நிலையத்தில் நேற்று நள்ளிரவில் பொம்மி என்ற பெண் பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்டபோது சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கிருக்கும் செவிலியர்களே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். 

இந்நிலையில், பிரசவம் பார்த்த செவிலியர் இடுக்கி வைத்து குழந்தையை வெளியே எடுக்கும்போது, தலை மட்டும் துண்டாக வந்ததால், குழந்தையின் உடல் பெண்ணின் வயிற்றில் சிக்கிக்கொண்டது. அதை வெளியில் எடுக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பல மணிநேர போரட்டத்திற்கு பிறகு பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் உடல் பகுதி மீட்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே கிராம மக்கள் வந்து செல்லும் சுகாதார நிலையத்தில் இரவில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தை சாமி, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,097.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.