Show all

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பவர்ஸ்டார் சீனிவாசன்! கட்சி? தற்போது இந்தியக் குடியரசு கட்சி (அத்வாலே)

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான பவர்ஸ்டார் சீனிவாசன் இந்திய குடியரசு கட்சி சார்பாக தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். 

ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுகிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, சில ஆண்டுகளுக்கு முன்பே நான் இந்திய குடியரசு கட்சியில் (அத்வாலே) இணைந்து விட்டேன். தற்போது கட்சியின் துணைத்தலைவராக உள்ளேன். இந்த தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, மக்கள் பணியாற்ற உள்ளேன். விரைவில் வேட்புமனு பதிகை செய்ய போகிறேன். இந்த பவர்ஸ்டாரை மக்கள் ஆதரிப்பார்கள் என்றார். 

இந்தியக் குடியரசுக் கட்சி: இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளுள் ஒன்று. பட்டியல் சாதியினரின் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் கட்சியிலிருந்து இது உருவானது. மகாராட்டிர மாநிலத்தில் இக்கட்சி வலுவான நிலையில் உள்ளது. தற்போது பல பிளவுகளாக பிரிந்துள்ளது. அனைத்து பிளவுகளும் 'இந்தியக் குடியரசுக் கட்சி' என்றே பெயர் கொண்டுள்ளன. 

இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சியின் பல்வேறு பிளவுகளை அவற்றின் தலைவர்களைக் கொண்டு அடையாளாப்படுத்துகிறது. 

இந்தியக் குடியரசு கட்சி (அத்வாலே), இந்திய குடியரசு கட்சி (எம்.ஜி.நாகமணி), இந்தியக் குடியரசு கட்சி (கவாய்), இந்தியக் குடியரசுக் கட்சி (காம்ப்ளே). என்று பல.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ள செ.கு.தமிழரசன் அகவை 66. அவர்களின் இந்திய குடியரசு கட்சி தமிழகத்தில் பிரபலம். இவர் நான்கு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,097.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.