Show all

மிகப் பழங்காலத்துக் கோட்டை திண்டுக்கல்லில் கண்டுபிடிப்பு

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 திண்டுக்கல் மாவட்டம் பாடியூரில்; பழங்காலத்து கோட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பாடியூரில் கிராமத்தின் நடுவே உள்ள கோட்டைமேடு என்ற இடத்தை தொல்லியல் துறை ஆய்வாளார் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர் 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர் இதில் 3 ஏக்கர் பரப்பளவில் பாறாங்கற்களால் கோட்டை எழுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தப் பகுதியில் முதுமக்கள் தாழிகள், கரும் சிவப்பு பானை ஓடுகள், பெண்களின் காதணிகள், மண்பாண்டங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இப்பகுதி மக்கள் அரசு தலையிட்டு இப்பகுதியில் உரிய முறையில் அகழாய்வு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கோட்டை பாறங்கற்களால் கட்டப்பட்டிருப்பதால் 5000 முந்தைய கோட்டையாக இருக்கும் என்று கருதப் படுகிறது.

-தமிழகத்தில் தோண்டும் இடங்களில் எல்லாம் தமிழர் வரலாற்றுப் பழமையை நிறுவ ஆதரங்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. மன்னர் ஆட்சியில் தமிழர் வாழ்ந்த பெருமைகளை மக்களாட்சியில் பறைசாற்ற தமிழர்களுக்கு நல்ல அரசு இல்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.