Show all

இலங்கைக்குச் சீனா மீது காதல். இந்தியாவிற்கு இலங்கை மீது காதல்! தனுசின் குட்டி படம் மாதிரி?

இந்திய கடற்படைக்குச் சொந்தமான இரு போர்க் கப்பல்களான தீர், சுஜாதா மற்றும் இந்திய கடலோர காவல் படை கண்காணிப்புக் கப்பல் வருணா ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள முதலாவது பயிற்சி அணி வீரர்களுக்கு இலங்கை கடல் பகுதியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

 இதையொட்டி, இலங்கை தலைநகர் கொழும்புக்கு வௌ;ளிக்கிழமை சென்றடைந்த இந்திய வீரர்களுக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 16) பயிற்சி தொடங்குகிறது.

 இதுகுறித்து பாதுகாப்புத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

 இந்தியா - இலங்கை இடையே பரஸ்பரம் பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவாக உள்ளது. இதையடுத்து, இரு நாடுகளின் முப்படையினரும் பரஸ்பரம் போர்ப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி ஆகியவற்றை தனியாகவும் கூட்டாகவும் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது இலங்கைக்கு இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் தீர், சுஜாதா மற்றும் கடலோர காவல்படைக்குச் சொந்தமான வருணா ஆகியவற்றின் வீரர்களும் சென்றுள்ளனர்.

 இது தவிர பயிற்சிக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டு கடந்த சனவரி முதல் கொழும்பு கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள தரங்கினி, சுதர்ஷினி ஆகிய இரு கப்பல்களும் போர்ப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும்.

 கடற்படை, கடலோரக் காவல் படையில் மாலுமிகளாக சேரும் வீரர்கள், இளம் அதிகாரிகளுக்கு பல்வேறு கடல் சூழல்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி, 24 வாரங்களுக்கு இந்த வீரர்களுக்கு கடலில் போர்ப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி, கடல் வானிலையை சமாளிக்கும் உத்திகள், கப்பல் பழுதுபார்ப்பு, கடல் போக்குவரத்து உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும்.

என்றார் அந்த உயரதிகாரி.

 

     இந்தியப் பெருங்கடல் பகுதியில் இலங்கையுடன் இந்தியாவும், சீனாவும் சம அளவில் நட்பு பாராட்டி வருகின்றன. இந்த நிலையில், இலங்கை கடல் பகுதியில் சீன கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்திக் கொள்ள இலங்கை அரசு கடந்த 2014-இல் அனுமதி அளித்தது.

 இந்தியா - இலங்கை இடையே 1987-இல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்த நடவடிக்கை மீறுவதாக இந்தியா புகார் தெரிவித்தது. இருப்பினும், நல்லெண்ண அடிப்படையில் சீன கப்பலை அனுமதித்ததாக இலங்கை கூறியது.

 இதைத் தொடர்ந்து, இந்தியாவை சமாதானப்படுத்தும் முயற்சியாக இந்திய போர்க்கப்பல்கள், விமானப்படை விமானங்கள் இலங்கை கடல் பகுதியில் பயிற்சி செய்ய அந்த நாட்டு அரசு அனுமதித்தது. இந்த நிலையில், இலங்கை கடல் பகுதியில் போர்ப்பயிற்சியில் ஈடுபடும் இந்திய படையினர் அந்த நாட்டு கடற்படை உத்திகள், கடல்சார் பாதுகாப்பு போன்றவற்றை கற்றுக் கொள்ள உதவியாக இருக்கும் என்று இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

 

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.