Show all

தமிழிசை சவுந்தரராஜன் தனது கீச்சுப் பக்கத்தில் பதிவு! பாஜகவின் வீடுதோறும் கழிப்பறை திட்டம் அனைவரையும் சென்றடையவேண்டும்

26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரூர் அருகே மாணவி கழிப்பிடம் சென்றபோது பாலியல் துன்புறுத்தலுக்குப்பின் சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்த நிகழ்ச்சி கண்டனத்துக்குரியது தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்கவேண்டும். பாஜகவின் வீடுதோறும் கழிப்பறை திட்டம் அனைவரையும் சென்றடையவேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தனது கீச்சுப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 அகவை மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

இந்த மாணவி தீபாவளி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தார். அன்று இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள புதர்கள் அடர்ந்த பகுதிக்கு மாணவி சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ் அகவை 20, சதீஷ் 22, ஆகிய இருவர் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
அப்போது மாணவி சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன்பின் தடுமாறியபடி எழுந்து வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நடந்த கொடுமை தொடர்பாக தாயாரிடம் கூறி கதறி அழுதார். இதுதொடர்பாக கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து அந்த மாணவிக்கு அரூர் மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மாணவி தர்மபுரி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி  பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், இணைய ஆர்வலர்கள்,  மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் அனுதாபங்களும் கண்டனங்களும், குற்றவாளிகளை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோபங்களும் வெளிப்படுத்தப் பட்டு வருகின்றன. 

இந்த நிலையில்தான் தமிழிசை, 'வீடுதோறும் கழிப்பறை கட்டி ஆய் போங்கள் என்கிற பாஜகவின் கொள்கை முழக்கத்தை தனது கீச்சுப் பக்கத்தில் பதிவிட்டு, சில ஆயிரங்கள் செலவு செய்து கழிப்பறை கட்டாமல், அல்லது மாதம் சில ஆயிரங்கள் கூடுதலாக செலவு செய்து கழப்பறை உள்ள வீட்டிற்கு குடியேறாமல், விலைமதிப்பில்லா உயிர் அநியாயமாய் பறிக்கப் பட்டதே என்கிற தங்கள் கட்சியின் ஆதங்கத்தை பதிவிட்டிருக்கிறார்.

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,969. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.