Show all

கோவில் விழாக்களில் ஆபாச நடனம் இல்லாமல் கலாச்சார நிகழ்ச்சி நடத்தலாம்

கோயில் திருவிழாவில், ஆபாச நடனம் இல்லாமல், கலாச்சார நிகழ்ச்சி நடத்தலாம் என்ற நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.தாமோதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, தொண்டிகரடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலாச்சார நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் எஸ்.திவாகர், கலாச்சார நடன நிகழ்ச்சி நடத்த அனுமதித்தால் அப்பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என வாதிட்டார். சட்டஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதற்கான ஆதாரங்களை இந்த நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.

இதையடுத்து மாலை 6 மணி முதல் 10.30 மணி வரை கலாச்சார நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் எனவும் இந்த நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள், ஆபாச வசனங்கள் இடம் பெறக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் 31-ந் தேதி கோயிலில் கலாச்சார நிகழ்ச்சி நடத்திக் கொள்ள மனுதாரருக்கு அனுமதியளித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.