Show all

நேதாஜி குறித்த ரகசிய ஆவணைங்கள் வெளியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் – ரஷ்யா

நேதாஜி குறித்து தங்கள் வசம் உள்ள ரகசிய ஆவணைங்களை வெளியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என ரஷ்யா உறுதியளித்துள்ளது.   

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில், முக்கிய ஆவணங்கள் சிலவற்றை மேற்குவங்க அரசு அண்மையில் வெளியிட்டது. 

இதன் தொடர்ச்சியாக, நேதாஜி குடும்பத்தினருடனான சந்திப்புக்கு பின், மத்திய அரசு வசம் உள்ள ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும் என பிரதமர் மோடியும் அறிவித்தார்.  

வெளிநாடுகளில் உள்ள ரகசிய ஆவணங்கள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்நிலையில் நேதாஜி குறித்து, ரஷ்யா வசம் உள்ள ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவிடம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்தார். 

அப்போது நேதாஜி குறித்த ஆவணங்கள் தங்கள் வசம் இருந்தால், அதனை வெளியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என செர்கி லாவ்ரோ உறுதி அளித்துள்ளார். இந்த தகவலை, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் கூறியுள்ளார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.