Show all

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றிப் பெற்றது செல்லாது என்று அறிவிக்கவேண்டி வழக்கு.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தனது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை இழந்தார்.

பின்பு, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவரை பெங்களூர் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதனையடுத்து, சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றிப் பெற்றது செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று, சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில்,

ஜெயலலிதா மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா உத்தரவிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.