Show all

கமலுடன் அடுத்தப் படத்தில் பணிபுரிவதாக வெளியான செய்திகளுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் மறுப்பு.

கமலுடன் அடுத்தப் படத்தில் பணிபுரிவதாக வெளியான செய்திகளை த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் வெற்றி பெற்றதற்காக எனக்கும் என் தந்தைக்கும் ரோல் மாடலாக இருக்கும் உலகநாயகன் பத்மபூஷன் டாக்டர்.கமல்ஹாசன் அவர்களின் ஆசிபெற அணுகியபோது பெருந்தன்மையுடன் ஏற்று கொண்டு எங்களைச் சந்தித்தார். அவருடன் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த போது எங்கள் வாழ்நாளில் ஒரு பெரிய கனவு நிறைவேறியதாகவே உணர்ந்தேன். நேரம் கிடைக்கும் போது த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் பார்க்கும்படி கோரிக்கை வைத்தபோது பெருந்தன்மையுடன் பரிசீலிப்பதாக கூறினார்.

இந்நிலையில் நான் அவரை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், படத்தை பற்றிய காட்சிகள் பற்றி அவரிடம் விவரித்ததாகவும் செய்திகள் வெளியாகிவுள்ளன. இது முற்றிலும் தவறான செய்தியாகும். சினிமா வாழ்வில் ஆரம்பக்கட்டதில் இருக்கும் எனக்கு இச்செய்தி அதிர்ச்சி தருகிறது. இந்தச் செய்தியால் அவர்மனம் புண்படும்படி நேர்ந்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.