Show all

தூய்மை பேணாத தனியார்பேருந்து நிறுவனத்திற்கு ரூ.15லட்சம் அபராதம்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்;தோர் எண்ணிக்கை அதிகம். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி அதிரடி சோதனைகளை நடத்தி கொசு உற்பத்தியாகும் இடங்களை பராமரிப்போருக்கு அபராதம் விதித்து வருகிறார்.

டெங்கு ஒழிப்பு தொடர்பாக சேலத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி அதிரடி ஆய்வு நடத்தியபோது, கொசு வளரும் வாய்ப்புள்ள வகையில், சுற்றுப்புறத்தை தூய்மை இல்லாமல் வைத்திருந்த எல்.ஆர்.என் பஸ் நிறுவனத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்தார்.

சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைக்காமல், நீர் தேங்கவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஆயிரம் முதல் லட்சங்கள் வரை அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.