Show all

பெண்மகவை ஈன்றெடுத்தார் நடிகை அசின்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மும்பை திரையுலக நடிகர் அக்சய் குமார், நடிகை அசின் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு குட்டி தேவதை என்று தெரிவித்துள்ளார்.

சென்னை திரையுலகில் இருந்து மும்பை திரையுலகில் நிலைத்துவிட்ட அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு அசின் படங்களில் நடிக்கவில்லை.

கர்ப்பமாக இருந்த அசின் நேற்று பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

குழந்தையின் புகைப்படத்தை கீச்;சுவில் வெளியிட்டுள்ளார் மும்பை திரையுலக நடிகர் அக்சய் குமார். குட்டி தேவதையின் வரவையொட்டி நண்பர்கள் அசின், ராகுலுக்கு வாழ்த்துக்கள் என்று கீச்சியுள்ளார் அக்சய் குமார்.

பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள அசினுக்கு மும்பை திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அக்சய் குமார் மிகவும் நெருக்கமான நண்பர் என்பதால் நேராக மருத்துவமனைக்கே சென்று குழந்தையைப் பார்த்துள்ளார்.

அசின், ராகுல் சர்மா திருமணம் ஒரு காதல் திருமணம். அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட நடிகர் அக்சய் குமாரே காரணம் என்று அப்போது கூறப்பட்டது.

மும்பை திரையுலகிற்குச் சென்ற இடத்தில் அசினுக்கு அக்சய் குமாரின் நட்பு கிடைத்தது. அக்சயோ தனது நண்பரான ராகுல் சர்மாவை அசினுக்கு அறிமுகம் செய்து வைக்க அந்த பழக்கம் காதலாக மாறியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.