Show all

சிறையில் சேமித்த பணத்தில், கஜா புயல் நிவாரணநிதி வழங்கினார்! விடுதலைக்கு காத்திருக்கும் எழுவரில் ஒருவரான ரவி(எ) ரவிச்சந்திரன்

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டு இருபத்தி ஏழு ஆண்டுகளாக, எப்போது விடுதலை என்று திக்கு தெரியாமால் தவித்து வருபவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவி(எ) ரவிச்சந்திரன் ஆவார். 

உச்ச அறங்கூற்று மன்றம் தமிழக அரசே விடுவிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியும், தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பியும், ஆளுநர் மேசையில் கிடப்பில் கிடக்கும் நிலையில், 

மதுரை மத்திய சிறையில் உள்ள இவர், சிறையில் பார்த்த வேலைக்காக வழங்கப் படும் தனது சம்பள சேமிப்பு பணத்தில் இருந்து ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கைக்காக பத்து மாதங்களுக்கு முன்பு ரூ.20 ஆயிரம் நிதி வழங்கினார். இந்நிலையில் கடந்த 6 மாத சேமிப்பு பணத்தில் இருந்து ரூ.5 ஆயிரத்தை கஜா புயல் பாதிப்பு நிவாரணத்திற்காக தனது வழக்கறிஞர் திருமுருகன் மூலம் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,981.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.