Show all

பாஜகவிற்கு எதிரான துண்டறிக்கை! திருவாரூரில் கல்லூரி மாணவர் கைது

தேர்தல் தொடங்கி விட்ட நிலையில், பாஜக மீண்டும் நடுவண் ஆட்சியை கைப்பற்றி விடக் கூடாது என்று கருதும் தமிழகத்தில்: அங்காங்கே மாணவர், தொழிலாளர், தொழில் முனைவோர் உள்ளிட்ட பொதுமக்கள் தன்னார்வமாக பாஜகவிற்கு எதிராக கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையாக திருவாரூரில் பாஜகவிற்கு எதிராக துண்டு அறிக்கை வழங்கிய மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்வத் ரபீக். இவர் மன்னார்குடி கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் நேற்று 'மாற்றத்திற்காக வாக்களிப்போம்' என்ற தலைப்பு அடங்கிய துண்டு அறிக்கைகளை கல்லூரி வளாக வாயிலில் மாணவர்களுக்கு வழங்கியதாக மன்னார்குடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

'குடிஅரசு நாட்டில் எவரையும் விமர்சனம் செய்ய அரசியலமைப்பு சட்டம் உரிமைகள் வழங்கிய போது, மோடி அரசு குறித்து கருத்துப்பரப்புதல் செய்ததை குற்றம் போல் பாவித்து மாணவன் என்று கூட பாராமல் பொய்வழக்கு புனைந்து கைது செய்திருப்பது கருத்துரிமையை நசுக்கும் செயல்.

மோடி அரசுடன் இணைந்து அதிமுக அரசும் காவல்துறையும் தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தப் பொய் வழக்கு குடிஅரசாட்சிக்கு விரோத செயலாகும்.

மாணவன் ரபீக் அவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியான போராட்டம் கொண்டு வழக்குகளை தகர்த்தெறிவோம்.

இவ்வாறு அந்த மாணவரும் பங்குபெற்றும், 'வளாக நண்பர்கள் இந்தியா' என்ற அமைப்பு  கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.