Show all

தமிழகத்தின் தலைவலியாகிப் போன சுங்கச்சாவடி! வேல்முருகனின் காரை தாக்கிய, சுங்கச்சாவடி வடமாநில ஊழியர்கள்

பயணத்தில்: வாகனங்களின் சாலை வரியைத் தாண்டி தேவையில்லாத சாலை பயன்பாட்டு சுங்கக் கட்டணம், காலதாமதம், எரிபொருள் விரயம், ஆகியவற்றுக்கான காரணமாகி தமிழகத்தின் தலைவலியாகிப் போன சுங்கச் சாவடிகள்: தற்போது தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபடத் தொடங்கி விட்டனவா என்ற கேள்வி இணையத்தில் தீயாகி வருகிறது. 

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஞ்சிபுரம் மதுராந்தகம் அருகே சுங்கச்சாவடி கட்டணம் குறித்த விவாதத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனின் காரை ஊழியர்கள் தாக்கினர்.

காஞ்சிபுரம் மதுராந்தகம் ஆத்தூரில் சுங்கச்சாவடியில் வேல்முருகன் கார் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுங்க கட்டணம் தொடர்பாக வடமாநில ஊழியர்கள் பிரச்னை செய்து கார் ஓட்டுநரை தாக்கியுள்ளனர். காரில் இருந்த வேல்முருகன் வெளியே வந்து தட்டி கேட்டதால் வடமாநில ஊழியர்கள் தப்பி ஓடினர்.

வடமாநில ஊழியர்கள் தப்பி ஓடியதால் சுங்க கட்டணம் வசூலிக்காமல் வாகனங்கள் இலவசமாக செல்கின்றன. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கார் ஓட்டுனரை தாக்கிய 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.