Show all

திரிசா எடுத்த அதிரடி முடிவு! இனிமேல் அடிதடிதானாம்

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகை திரிசா, முழுக்க முழுக்க அடிதடியில் களமிறங்கவுள்ளார்.

தமிழ்த்; திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிசா. இவர் நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்னும் கதைத்தலைவியாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான வெற்றிப் படம் '96'. அடுத்ததாக இவர் லைகா நிறுவனம் தயாரிக்கும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி மற்றும் வல்லினம் போன்ற படங்களை இயக்கிய எம்.சரவணன் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் திரிசாவுக்கு மேலாளுமைக்கான கதைத்தலைவன் இல்லை என்றும், முழுக்க முழுக்க அடிதடி படமாக உருவாகவிருக்கிறது என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்றும் தெரிகிறது. படத்தின் பெயர் இன்னும் முடிவாக வில்;;;லை.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,054.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.