Show all

நவநீத கிருஷ்ணன் பா.உ கடுங்கோபம்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்திற்கு தொடர்ந்து தீங்குகள் மட்டுமே இழைத்து வரும் பாஜக அரசு குறைந்த பட்சம் காவிரி மேலாண்மை அமைப்பிலாவது தமிழகத்திற்கு நன்மை செய்ய விட்டால் தங்கள் பாராளுமன்ற உறுப்பினராக மானங் கெட்ட பிழைப்பு நடத்துவதற்கு தற்கொலை செய்து கொள்வதை வேறு வழியில்லை அவர் மனதிற்குள் புழுங்கிய விசயத்தை வெளிப்டையாக- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என அதிமுக பாராளுமன்ற உறுப்பினர், நவநீத கிருஷ்ணன் எரிமலையாக வெடித்தார். 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச அறங்கூற்றுமன்றம் வழங்கிய தீர்ப்பில், 6 வாரத்துக்குள் நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி, உச்சஅறங்கூற்றுமன்றம் அளித்த கெடு நாளை வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எந்தவொரு முடிவையும் நடுவண் அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

இதனால், நடுவண் நீர்வளத்துறை அமைச்சகம், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக கண்காணிப்பு குழுவை அமைக்க பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மேலாண்மை வாரியத்தில் கூடுதலாக சில உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து நடுவண் அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் குழப்பங்களால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, மாநிலங்களவையில் இன்று அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் 'காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்தின் ஜீவாதார உரிமை. கடும் வறட்சியால், குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. தமிழக உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கோரி சிலர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகப் போவதாகக் கூறுகின்றனர். ஆனால் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்கொலை செய்து கொள்ளவும் தயாராக உள்ளோம்' எனக் கூறினார்.

இதன் பொருட்டு அவையில் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த உறுப்பின்ரகளும், மற்ற கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரை சமாதானம் செய்து அமர வைத்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,740.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.