Show all

கேள்வியே புரியவில்லையாம்! ஒருவழியாக காவிரி இழுத்தடிப்புக்கு உபாயம் கண்டது மோடி அரசு! குழுவா? வாரியமா?

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், அறங்கூற்று மன்றக் கெடுவை தாண்டி இழுத்தடிக்க, தங்கள் மீது தவறில்லாமல் காட்டிக் கொள்ள, ஒரு வழியாக அறை போட்டு சிந்தித்து ஓர் உபாயம் கண்டு விட்டது மோடி அரசு! படிக்காமலே தேர்வுக்கு வந்த மாணவன் கேள்வியே புரியவில்லை என்ற கதையாக. ஆம் 

காவிரி விவகாரத்தில் உச்சஅறங்கூற்றுமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் பிறப்பித்த உத்தரவில் திட்டம் என குறிப்பிட்டுள்ளது குழுவா இல்லை வாரியமா என சந்தேகத்தை விளக்க வேண்டும் என்று நடுவண் அரசு மனு பதிகை செய்யலாம் என்பதுதான் அந்த உபாயம். 

சுமார் 200 ஆண்டுகளாக காவிரி விவகாரம் நீடித்து வருகிறது. நடுவண் அரசில் எந்த தலைமையிலான ஆட்சி வந்தாலும் சரி காவிரி பிரச்சினை என்பது இழுத்தடிப்பாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்தும் கூடுதல் நீர் கேட்டும் கர்நாடகம், புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த விவகாரத்தில் உச்சஅறங்கூற்று மன்றம், நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை காட்டிலும் தமிழகத்துக்கு குறைந்த அளவிலான நீரே ஒதுக்கீடு செய்து. இதில் காவிரி நீரை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்சஅறங்கூற்றுமன்றம் விதித்துள்ள கெடு நாளை முடியவுள்ளது. இந்த நேரத்தில் காவிரி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம் என்பது குழுவா அல்லது வாரியமா என்று சந்தேகம் உள்ளதாகவும் அதை அறங்கூற்றுமன்றத்திடம் விளக்கம் கேட்கவும் மோடி அரசு முடிவு செய்துள்ளதாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,740

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.