Show all

கரும்பு உழவன் சின்னம் கிடைத்திருக்கிறது நாம் தமிழர் கட்சிக்கு! இரட்டை மெழுகு வர்த்தியை விட இது சிறப்பே

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பு அடைந்து வரும் நிலையில், புதிய கட்சிகள் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் கட்சிகள் ஆகியவற்றுக்கு தேர்தல ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. 

அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கைவிளக்கு சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் வழங்க வேண்டும் என கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. 

அடுத்தப்படியாக சீமானின் 'நாம் தமிழர்' கட்சிக்கு ஒதுக்கப்படும் சின்னம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக அக்கட்சி இரண்டு மெழுகுவர்த்தி சின்னத்தில் நின்று பல்வேறு தேர்தலை எதிர்கொண்டு இருந்தது. 

அதனால், எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு மெழுகுவர்த்தி சின்னமே வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விட்டிருந்தது. ஆனால் அதை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. தொடர்ந்து வேளாண்துறை சார்ந்த சின்னத்தை ஒதுக்க வேண்டும் என நாம் தமிழர் கோரிக்கை விடுத்திருந்தது. 

இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், தற்போது அக்கட்சிக்கு கரும்பு உழவன்  சின்னத்தை ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் இதே சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,092.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.