Show all

கூடுதல் அதிகாரம் கொழுப்பையும் கூட்டுமா! பெண் வழக்கறிஞர்களிடம் பாலியல் தொல்லை; அறங்கூற்றுவர் தற்காலிக நீக்கம்

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவராக இருந்தவர் ராஜவேல். இவர் பணியில் இருக்கும் பெண் வழக்கறிஞர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்தபோதே, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ஆனால், யாரும் புகார் கொடுக்க முன்வராததால் அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அறங்கூற்றுமன்ற நேரம் முடிந்த பின்னர் மாலை 6.30க்கு மேல் தான் மோட்டார் வாகன வழக்குகளைப் பார்ப்பார். அது முடியும் வரை பெண் வழக்கறிஞர்களை இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவார். யாரும் இல்லாத நேரத்தில் அவர்களிடம் குறும்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். பெண் வழக்கறிஞர்கள் கத்தி கூச்சல் போட்டால், தெரியாம பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு. வெளிய தெரிஞ்சா அசிங்கமாகிடும். இனிமேல் இந்தத் தவறு நடக்காது' என காலில் விழுந்திடுவாராம். மேலும், பல பெண் வழக்கறிஞர்களுக்கு இரவு நேரத்தில் பேசி மூலமும், சேதி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது. 

மேலும் குடும்ப நல வழக்குக்காக வரும் பெண்களை, வேண்டுமென்றே மாலை வரை காக்கவைத்து ரசிப்பார். அதன்பிறகுதான் பிரச்னைகளைக் கேட்டறிவார். அப்படி வரும் பெண்களிடம், குடும்ப பிரச்னைகளை தீர்த்து வைப்பதாகச் சொல்லி அவர்களின் பேசி எண்ணை வாங்குவார். அதன்பிறகு அவர்களிடம் பேசியில்; குறுப்பாக பேசுவார். என்றெல்லாம் அவர் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப் படுகிறது.

அறங்கூற்றுவர்களுக்கு வெள்ளைக்காரர் காலத்தில் கொடுககப் பட்ட கூடுதல் மரியாதையும், கூடுதல் அதிகாரமும் இப்படியும் சில விளைவுகளுக்கு காரணமாகி விடுகிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களுக்கான அதிகாரங்களை முறைப்படுத்துவது முதன்மைத் தேவையாகும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,042.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.