Show all

தமிழிசைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் தொடர் போராட்டம்

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கரூர் பாஜக செயற்குழு கூட்டத்துக்கு பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை வருகையை எதிர்த்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பாஜகவினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்களுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டனர்

இந்த மோதலில் காவல்துறை வாகனங்களும் உடைக்கப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. மோதலில் ஈடுபட்டவர்கள் காவல்;துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெர்சல் படத்தில் சரக்குமற்றும் சேவை வரி குறித்த குறைபாடுகள் இடம் பெற்றதற்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை எதிர்ப்பு தெரிவித்தார். அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யை வளைத்துப் போடுவதற்காக பாஜக திட்டமிடுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த தமிழிசை, ‘விஜய்யை வளைத்துப்போட்டு அரசியல் செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. திருமாவளவன்தான் கட்டப்பஞ்சாயத்து செய்து கட்சி அலுவலக இடம் உட்பட பல நிலங்களை வளைத்துப் போட்டுள்ளார்என்றார்.

திருமாவளவன் குறித்த தமிழிசையின்; இந்தப் பொய்யான விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை திஙகட்கிழமை அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவரது உருவ பொம்மைக்கு தீ வைத்து எரித்தனர்.

மேலும் பல்வேறு இடங்களில் தமிழிசைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.