Show all

அரசு அதிகாரிகளின் ஊழல்களை அரசுக்கு அறிவிக்காமல் செய்தி வெளியிட்டால் தண்டனை

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராஜஸ்தான் மாநிலத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு எதிரான தனிநபர்களின் ஊழல் புகார்களை, அரசின் ஒப்புதல் பெறாமல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அறங்கூற்று மன்றங்களுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்கள்மீது தனிநபர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் வெளியிட்டால், அது குற்றமாகக் கருதப்படும் என்று வசுந்தரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் மாநில பாஜக அரசு புதிய அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

கையூட்டு போன்ற புகார்கள் இருந்தாலும் அவை விசாரணைக்கு அறங்கூற்று மன்றத்தால் ஏற்கப்படும்வரை அந்த ஊழியர்களைப் பற்றி எந்த ஒரு செய்தியோ, புகைப்படமோ ஊடகங்கள் வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட்டால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை என்கிற திருத்தங்கள் அந்த மசோதாவில் செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், ராஜஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அரசின் அவசர சட்டத்தின் நகலை தனது கீச்சு பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி,

இது தமிழ்தொடர்ஆண்டு-5119 ஆம்ஆண்டு 4919அல்ல (2017ஆம்ஆண்டு. 1817அல்ல) என்பதை மரியாதைக்குரிய ராஜஸ்தான் பாஜக முதல் அமைச்சர் அம்மையார் அவர்களுக்கு மெத்தப் பனிவுடன் தெரிவித்து கொள்கிறேன்என குறிப்பிட்டுள்ளார்.

-பாவம் இராகுல் காந்தி! வெள்ளையர் ஆட்சியே தேவலாம்; நடப்பு பாஜக ஆட்சிக்கு; என்று மக்கள் புலம்பிக் கொண்டிருப்பது அவருக்கு தெரியவில்லை போலும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.