Show all

சீமான், அமீர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பதிந்தவழக்கில் இருவரும் விடுதலை

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராமேஸ்வரத்தில் தமிழ் திரையலகம் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக 03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5110 (19.10.2008) அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது சீமான், இயக்குனர் அமீர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூ பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

ராமேஸ்வரம் அறங்கூற்று மன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை,

பின்னர் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அறங்கூற்று மன்றத்திற்;கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக அறங்கூற்று மன்றத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் நேரில அணியமாகி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இயக்குனர் சீமான், அமீர் இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து ராமேஸ்வரம் முதன்மை அறங்கூற்று மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.