Show all

தமிழ்மக்களின் ஆர்வமா! உண்மையா? கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை தமிழகம் வந்து வாக்களித்தது

சர்கார் படத்தில்: விஜய் வாக்களிக்க இந்தியா வந்து, ஒருவிரல் புரட்சி நடத்துவது போல- சுந்தர்பிச்சை இந்தியா வந்து நாடாளுமன்றத் தேர்தலில் கலந்து கொண்டு வாக்களித்தது உண்மையா? பரபரப்பானது தமிழகம்
 06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று இந்திய நாடாளுமன்ற தமிழக உறுப்பினர் தேர்வுக்காக தேர்தல் நடந்து முடிந்தது.
நடப்பு தமிழகத்தின் ஆட்சியை காப்பாற்ற, தில்லுமுல்லுகள் இழுத்தடிப்புகளுக்கு உட்படுத்தப் பட்ட 18  சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், மேலும் காலியான ஒரு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து நடத்தப் பட்டது. 
பொது மக்களோடு அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் மக்களாட்சிக் கடமையை நிறைவேற்றினர்.
இந்நிலையில் விஜய் நின்று வாக்குப்பதிவு செய்த புகைப்படங்களை ஒருவிரல் புரட்சி என்ற தலைப்போடு அவரது ரசிகர்கள் பகிர்ந்தனர். 
மேலும் சுந்தர் பிச்சை தமிழகம் வந்து வாக்களித்ததாகவும் அவர்களில் பலர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளனர். 
சர்க்கார் படத்தில் வெளிநாட்டு நிறுவனத்தின் தலைவராக இருக்கும் விஜய், வாக்களிப்பதற்காக தமிழகம் வந்திருப்பார், அப்போது அவரின் வாக்கை வேறு ஒருவர் போட்டுவிட அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை ஆகும். 
அதுபோன்றே தற்சமயம் கூகுள் நிறுவனத்தின் தலைவராக சுந்தர் பிச்சையும் இருப்பதால் அவர் வாக்களிக்க தமிழகம் வந்துள்ளதாக புகைப்படங்களை பலர் பகிர்ந்தனர். ஆனால் அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்பதும் அவருக்கு இந்தியாவில் வாக்குரிமையே இல்லை என்பதுவுமே உண்மை 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,127.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.