Show all

சமூகவலைதளத்தில் தீயானது! சின்மயி கண்ணாடி மற்றும் கலாய்ப்பு

இன்று காலை முதலே திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது மக்களாட்சிக் கடமையை நிறைவேற்றினர். திரைமின்மினிகள் பலரும் வாக்களித்த பின்னர் கையில் மையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று காலை முதலே திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்கள் வாக்களித்த பின்னர் கையில் மையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு பாடகி சின்மயி தான் வாக்களித்த பின் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, தெய்வம் தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தப் பதிவைப் பார்த்த 'தமிழ்ப்படம்' இயக்குநர் அமுதன், சின்மயி அணிந்திருந்த கண்ணாடியை கலாய்த்துள்ளார். 'இந்தக் கண்ணாடியை மீண்டும் காரில் எப்படிப் பொருத்துவீர்கள் என்று'
இது சமூகவலைதளத்தில் விருப்பங்களையும், பகிர்வுகளையும் குவித்து வருகிறது
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,126.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.