Show all

அரசாங்கமே அணிவகுத்த பின்னணியில் கடந்த இரா.கி.நகர் தேர்தலில் போட்டியிட்ட தினகரன்! இன்று வியப்புக்குறியாய்

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரா.கி.நகர் தொகுதியில் தினகரன் கருத்துப் பரப்புதலுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானியைச் சந்தித்து வெற்றிவேல் புகார் மனு அளித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். தொப்பி, கிரிக்கெட் மட்டை, விசில் ஆகிய 3 சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இரா.கி.நகர் தொகுதியில் தீவிர கருத்துப் பரப்புதல் செய்ய தினகரன் திட்டமிட்டுள்ளார். தேர்தல் கருத்துப் பரப்புதலுக்கு காவல்துறையிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். இதற்காக தினகரன் ஆதரவாளர் அனுமதி கேட்டும் காவல்துறையினர் உரிய அனுமதியை அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் இதுபற்றி மாநில தலைமை தேர்தல் அதிகாரியான ராஜேஷ்லக்கானியைச் சந்தித்து புகார் மனு அளித்தார்.

அதில், இயங்கலை கருத்துப் பரப்புதலுக்கு கடந்த 4 நாட்களாக அனுமதி கேட்டு வருகிறோம். ஆனால் காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகிறார்கள். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,629

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.