Show all

போராட்டக் களத்தில் மீனவ மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர், முதல்வர் பழனிசாமி வரும்வரை போராட்டம் தொடருமாம்

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம், நீரோடி ஆகிய 8 மீனவ கிராம மக்கள் ஓகி புயலில் மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக சின்னத்துறையில் இருந்து குழித்துறை நோக்கி நடை பயணம் மேற்கொண்ட அவர்கள் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும், பலியான மீனவர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

இதைதொடர்ந்து குழித்துறை தொடர்வண்டி நிலையத்திற்கு சென்ற அவர்கள், அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் பத்தாயிரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீனவர்களின் தொடர் வண்டி மறியல் போராட்டத்தால் 7 தொடர்வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போராட்டக் களத்தில், மீனவ மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும்வரை போராட்டம் தொடரும்’, ‘தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், கேரள முதல்வரிடம் மனு கொடுப்போம்என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,629

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.