Show all

தமிழக பாஜகவினர் மீதான காயத்ரி ரகுராமின் சாடல்! தமிழக பாஜகவில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவான பாரதி ஜனதா யுவ மோர்சாவில் செயற்குழுவில் இருக்கிறார் காயத்ரி ரகுராம். தற்போது, தமிழக பாரதிய ஜனதாவை கடுமையாக தனது கீச்சுப் பக்கத்தில் விமர்சித்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

தமிழக பாஜகவில் உட்கட்சி அரசியல் நிலவுகிறது. எனது புகழைப் பார்த்து அவர்கள் அச்சத்துடனும் கலக்கத்துடனும் உள்ளனர். இந்த பருந்துகளால் நான் பந்தாடப்படுகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

என் மீது களங்கம் சுமத்தும் வகையில் சிலருக்கு கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது. நான் அண்மை காலமாக பாஜகவில் சுறுசுறுப்பாக இயங்கவில்லை. ஆனாலும் சில இளம் மனதுகள் இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த தந்திரங்களில் ஈடுபடுகின்றன. இளந்தலைவர்களுக்கு வாழ்த்துகள்.

எல்லாம் வினைப்பயன்! அவர்கள் என்றாவது வெல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஆனால், இதே மோசமான இதயத்தோடு அல்ல. இப்படிப்பட்ட அரசியல் பற்றி பதிவிடகூட எனக்கு விருப்பமில்லை இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

இப்படி பெயர் குறிப்பிடாமல், ஒட்டு மொத்த தமிழக பாஜகவை, காயத்ரி ரகுராம் திறனாய்வு செய்திருப்பது தமிழக பாஜகவில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,983.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.