Show all

ஐராவதம் மகாதேவன் காலமானார்! 'சிந்துவெளி நாகரிகம்' ஆரியர் வரவுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் என்பதை நிறுவியவர்

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அகவை 88.  இவர் தனது இல்லத்தில் உடல் நல குறைவால் இன்று காலமானார்.

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், இந்தியாவன் உயரிய விருததான, பத்மசிறி விருது பெற்றவர்.  தினமணி நாளேட்டின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

தமிழ்பிராமி கல்வெட்டுகளில் ஆராய்ச்சி செய்துள்ள இவர், சிந்துசமவெளி எழுத்துகளுக்கும், தமிழ் பிராமி மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவினை தெளிவு படுத்தியவர். 

சிந்து சமவெளி நாகரிகம், ஆரியர்கள் இந்தியாவில் வந்து தோற்றுவித்த வேத காலத்துக்கும் முந்தைய தமிழர் நாகரிகம் என்பதை நிறுவியவர் ஐராவதம் மகாதேவன் என, அவருடைய மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி நாளிதழ் தமிழ் மணக்கும் நாளிதழாக திகழ்வதற்கு அடித்தளம் அமைத்தவர் ஐராவதம் மகாதேவன் தான். ஐராவதம் மகாதேவனிடம் புதைந்து கிடந்த திறமைகளை தமிழகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவரது மறைவு தமிழுக்கும், தொல்லியல் துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,983.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.