Show all

சீமானுக்கு இல.கணேசன் கண்டனம்! இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்; சிறையில் அடைக்கணும்

இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்; சிறையில் அடைக்கணும்! சீமானுக்கு இல.கணேசன் கண்டனம். ராணிப்பேட்டை முத்துக் கடையில் சீமானின் உருவபொம்மையை காங்கிரசார் சிலர் தீயிட்டுக் கொளுத்தி கைதாகினர்.

30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நம் நாட்டின் தலைமைஅமைச்சராக இருந்த ஒருவரை கொன்றதைப் பெருமையோடு பேசும் சீமான், இந்தியாவில் வாழத் தகுதியற்றவர். அவரைச் சிறையில்தான் அடைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் இல.கணேசன் கூறினார்.

காந்தியை கோட்சே சுட்டது சரிதான் என்று சிலர் பேசும்போது, ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்பதும் சரிதான் என விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கருத்துப்பரப்புதலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துகள் விவாதப் பொருளாகியிருக்கிறது.

காவல் நிலையங்களில் காங்கிரஸ் கட்சியினர் சீமானைக் கைதுசெய்யக் கோரி புகார் அளித்துவருகிறார்கள். அந்தப் புகாரில், சீமான் வன்முறையைத் தூண்டுகிறார். ராஜீவ் காந்தியைக் கொன்றதாக அவரே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். சட்டத்தின் மீதான நம்பிக்கையையும், மாண்பையும் சீர்குலைக்கிறார். தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சீமானை உடனே கைதுசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். 

இந்த நிலையில், ராணிப்பேட்டை முத்துக் கடையில் சீமானின் உருவபொம்மையை காங்கிரசார் சிலர் தீயிட்டுக் கொளுத்தி கைதாகினர். 

இதனிடையே, காந்தியாரின் பிறந்தநாள் விழாவையொட்டி, குடியாத்தத்தில் நடைபெற்ற நடைபயண நிகழ்ச்சியில், பாஜக தலைவர் இல.கணேசன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த இல.கணேசன், அரசியல் வேறு; தேசபக்தி வேறு. அந்நிய நாட்டைச் சேர்ந்த சக்தி, நம் நாட்டின் தலைமைஅமைச்சரைக் கொன்றனர். அறங்கூற்றுமன்றம்தான் விசாரித்து அந்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கியது. ராஜீவ் கொலையைப் பெருமையோடு ஆமாம்’ என்றுகூறும் சீமான், இந்த தேசத்தில் வாழத் தகுதியற்றவர். சிறைச்சாலையில்தான் அவரை அடைக்க வேண்டும் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,308.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.