Show all

அமித்சா அவர்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள்! அமித்சாவுக்கு தெரிந்துதான் இப்படி பேசுகிறார் என்றால்,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் குப்த பேரரசர் ஸ்கந்தகுப்த விக்ரமாதித்தன் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கில் அமித்சாவின், வரலாற்று ஆசிரியர்களுக்கான வேண்டுகோள்.

01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் குப்த பேரரசர் ஸ்கந்தகுப்த விக்ரமாதித்தன் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இதை உள்துறை அமைச்சர் அமித்சா தொடங்கி வைத்தார்.

1700 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து 1470 வரை வட இந்தியாவின் பொற்காலமாக கருதப் படுகிற குப்தர்கள் பேரரசில் கடைசி மன்னர்தான் ஸ்கந்தகுப்த விக்ரமாதித்தன். 

கருத்தரங்க மேடையில் அமித்சா பேசியதாவது:-
இங்கு மேடையிலும், பார்வையாளர்கள் வரிசையிலும் திறமையான வரலாற்று அறிஞர்கள் உள்ளனர். உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்திய வரலாற்றை இந்தியாவின் கண்ணோட்டத்தில் மாற்றி எழுத வேண்டியது அவசியம். யார் மீதும் பழி போடாமல் எழுத வேண்டும்.

நமது வரலாற்றை எழுத வேண்டியது நமது பொறுப்பு. எத்தனை காலத்துக்கு ஆங்கிலேயர்களையே குற்றம் சாட்டிக்கொண்டிருக்க போகிறோம்? யார் மீதும் பழி சுமத்த வேண்டியது இல்லை. உண்மை என்னவோ, அதை மட்டும் எழுதுங்கள். அது காலம் கடந்தும் நிற்கும்.

தலைமை அமைச்சர் மோடியால்தான், உலகஅளவில் இந்தியாவின் மரியாதை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையில், இந்தியாவின் மரியாதை அதிகரித்துள்ளது. நமது கருத்துகளை உலகம் கவனிக்கிறது. சர்வதேச நிலவரம் குறித்து நமது தலைமைஅமைச்சர் பேசும்போது உலகம் கவனிக்கிறது. இவ்வாறு அமித்சா பேசினார்.

மோடி அவர்கள், அண்மைக் காலமாக, உலக அரங்கில், “தமிழ்தான் இந்தியாவின் தொன்மையான மொழி. ஏன்? உலகின் தொன்மையான மொழி” என்று பேசி வருவது அமித்சாவுக்கு தெரிந்துதான் இப்படி பேசுகிறார் என்றால், அவரது நேர்மைக்கு பாராட்டுக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,309.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.