Show all

நாம்தமிழர் கட்சிக்கு! அண்ணா காலத்து திமுகவில் போல, ஆர்வமாய் குவியும் இளைஞர்கள்

தன்னார்வமாக கட்சி பணிக்கு இளைஞர்கள் திரளும் வியப்பு, அண்ணா காலத்து திமுகவிற்குப் பிறகு மீண்டும் சீமானால் சாத்தியமாகி இருக்கிறது. மக்களை நெருங்கி செல்லும் நாம் தமிழர் கட்சியின் அடுத்த வெற்றி இது!

29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தில்லாக களம் இறங்கியிருக்கிறது இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி. விக்கிரவாண்டியில் கந்தசாமி என்பவர் போட்டியிடுகிறார். அகவை 36 ஆகிறது. வேளாண் குடும்பம். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறாராம். சமூகச் செயற்பாட்டாளர் கந்தசாமி என்றாலே அந்த சுற்றுவட்டாரத்தில் நன்கு தெரிகிறது. 

தனிப்பட்ட முறையில் இவர் சமூக செயற்பாட்டாளர் என்றாலும், கட்சியிலும் இவரது பணி மிக முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. தீவிரமான களப்பணி ஆற்றுபவர். எத்தனையோ போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களை கட்சி சார்பாக முன்னெடுத்துள்ளார். மக்கள் சேவை சிகரம் நற்பணி மன்றம் தொடங்கி கிராமப்புற ஏழை எளிய முதியோர்களுக்கு, ஏழை மாணவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். தான் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே இவர்களின் நலனுக்காக செலவிடும் கந்தசாமியின் உயரிய குணங்கள் மக்களை ஏற்கனவே சுண்டி இழுத்த ஒன்றுதான். அதனால்தான் சீமான் இவரை வேட்பாளராக முன்னிறுத்தி உள்ளார். 

சாதி மற்றும் பணத்தை மையமாக வைத்து இந்த தேர்தலை சந்திக்கும் தலைமையான இரண்டு கட்சிகளை எதிர்த்து சாதிக்கு அப்பால் எந்தவித பொருளாதார பின்புலமுமற்ற.. படித்த பட்டதாரியான கந்தசாமிக்கு ஆதரவாக தகவல் தொழில்நுட்பத் துறை  ஊழியர்கள் எல்லாம் கிளம்பி விக்கிரவாண்டிக்கு கருத்துப் பரப்புதல் செய்ய வந்துவிட்டார்கள். சென்னையில் உள்ள இன்பபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள்தான் இவர்கள் எல்லோரும். 

இதேபோலதான் வேலூரிலும் இவர்கள் நாம்தமிழர் கட்சிக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள். இப்போது கந்தசாமிக்காக ஓட்டு கேட்டு வருகின்றனர் இந்த இளைஞர்கள். 

தன்னார்வமாக கட்சி பணிக்கு இளைஞர்கள் திரளும் வியப்பு, அண்ணா காலத்து திமுகவிற்குப் பிறகு மீண்டும் சீமானால் சாத்தியமாகி இருக்கிறது. மக்களை நெருங்கி செல்லும் நாம் தமிழர் கட்சியின் அடுத்த வெற்றி இது!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,307.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.