Show all

சேலத்தில், பொங்கல்விழாவை வரவேற்கும் முகமாக கண்காட்சி!

வரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக சேலத்தில் உழவர்களின் வாழ்க்கை முறையை விளக்கும் வகையில் ஒரு கண்காட்சியை முன்னெடுத்திருக்கிறார்கள் சேலத்து மக்கள்.

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக சேலத்தில் உழவர்களின் வாழ்க்கை முறையை விளக்கும் வகையில் ஒரு கண்காட்சியை முன்னெடுத்திருக்கிறார்கள். 

சேலம், அம்மாபேட்டையில் பொங்கல்விழாவை வரவேற்கும் விதமாக ‘உழவன் குடில்’ எனும் சிறப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இவற்றில் தென்னை ஓலைகளால் நெய்யப்பட்ட கூரை, செம்மண்ணால் கட்டபட்ட சுவர், மண் அடுப்பு மற்றும் மணிப்பூட்டிய மாடு உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

மேலும் தமிழர்களின் பாரம்பரிய உணவான குதிரைவாலி அரிசி, கருப்பு கவுனி அரிசி, வரகு மற்றும் சாமை போன்றவற்றை இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்தியாவின் முதுகெலும்பாக வேளாண்மை உள்ளது.  ஆனால் தற்போதைய பாஜக அரசின் ஹைட்ரோ கார்பன் மீத்தேன், 8 வழிச் சாலை உள்ளிட்ட திட்டங்களால் வேளாண்மை அழிந்து வருவதாக பார்வையாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.  

தற்பொழுது நகர்ப்புறங்களில் வாழும் இளைய தலைமுறைகளுக்கு வேளாண்மைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் இந்த கண்காட்சி மூலம் நம்முடைய வேளாண்துறையினரின் வாழ்வியல் முறை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிவிக்க இக்கண்காட்சி முன்னெடுக்கப் பட்டிருப்பதாக கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,394.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.