Show all

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு! ஜப்பானுக்கு முதலிடம். இந்தியா மேலும் இரண்டு இடங்கள் சரிவு

ஜப்பான் கடவுச்சீட்டின் மூலம் உலகின் 191 நாடுகளுக்கு நுழைவுஇசைவு இல்லாமல் பயணிக்க முடியும், என்ற நிலையில் நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் ஜப்பான் நாட்டின் கடவுச்சீட்டு உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ், என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எந்த நாட்டினது என்கிற பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

ஜப்பான் கடவுச்சீட்டின் மூலம் உலகின் 191 நாடுகளுக்கு நுழைவுஇசைவு இல்லாமல் பயணிக்க முடியும், என்ற நிலையில் நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் ஜப்பான் நாட்டின் கடவுச்சீட்டு உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

இரண்டாமிடத்தை சிங்கப்பூர் கடவுச்சீட்டு பிடித்திருக்கிறது. 190 நாடுகளுக்கு நுழைவிசைவு இல்லாமல் சென்றுவரும் வாய்ப்பை இது வழங்குகிறது. இவை இரண்டும் ஆசியா கண்டத்து நாடுகள்.

ஜெர்மனியின் கடவுச்சீட்டு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதன்மூலம், 189 நாடுகளுக்கு நுழைவுஇசைவு இல்லாமல் பயணிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் நாடுகளின் பட்டியல், 4.வது இடம்- பின்லாந்து மற்றும் இத்தாலி. 5.வது இடம்- ஸ்பெயின், லக்சம்பர்க் மற்றும் டென்மார்க். 6.வது இடம்- ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ். 7.வது இடம்- சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, அயர்லாந்து, ஆஸ்திரியா. 8.வது இடம்- அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, கிரீஸ், பெல்ஜியம். 9.வது இடம்- நியூசிலாந்து, மல்டா, கிரீஸ் ரிபப்ளிக், கனடா, ஆஸ்திரேலியா. 10.வது இடம்- ஸ்லோவாக்கியா, லித்தானியா மற்றும் ஹங்கேரி

இந்த 'சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளின்” பட்டியலில் கடந்த ஆண்டில், 82-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 84-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய கடவுச்சீட்டு, 58 நாடுகளுக்கு நுழைவிசைவு இல்லாமல் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது. 

மோசமான கடவுச்சீட்டுக்கள் பட்டியலில்: பாகிஸ்தான், வடகொரியா, சூடான், நேபாளம், லிபியா, ஏமன், சோமாலியா, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இருக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,394.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.