Show all

தகுதி நீக்கம் செல்லும்! 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு, எங்களுக்கு எந்தவித பின்னடைவும் இல்லை: தினகரன்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு தினகரன் ஆதரவு  சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு குறித்து அம்மா முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறியதாவது: 

அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே.  தகுதி நீக்கம் செய்யபட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை சட்டமன்ற உறுப்பினர்களே முடிவு செய்வார்கள். இன்று மாலை 18 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என தினகரன் கூறினார்.

மீண்டும் கொஞ்ச காலத்திற்கு எடப்பாடி- பன்னீர் அணிஅதிமுக ஆட்சி நீட்டிப்பு செய்யப் பட்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலை நடத்தும் பாஜக விருப்பத்திற்கு இது பயன் படும். ஆனால் பாஜகவுக்கு ஒரு பயனும் இருக்காது. தினகரனுக்கு இழப்பு ஒன்றுமில்லை. எடப்பாடி- பன்னீருக்கு இழப்பு தள்ளிப் போடப்பட்டு உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,951.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.