Show all

தகுதி நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் கூடாது

தினகரன் ஆதரவு சட்;டமன்ற உறுப்பினர் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் மனு பதிகை செய்யப்பட்டது. இந்த வழக்கு அறங்கூற்றுவர் துரைசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது

பேரவைத்தலைவர் கட்சிக் காரர் போல செயல்பட்டு சட்;டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,

முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று மட்டுமே ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம், கட்சியை மீறி செயல்படவில்லை என்றும்,

தினகரன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதாடினார்.

இதனையடுத்து பேரவைத் தலைவர் தரப்பில் அணியமான வழக்கறிஞர்,

வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத விசயங்கள் வாதாடப் படுவதாகவும், அரசு, பேரவைத்தலைவர் மீது எதிர் தரப்பு குற்றம்சாட்டுவதால் விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட அறங்நுகூற்றுவர் துரைசாமி 18 சட்;டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் 18 தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டதை ஏற்க முடியாது, எந்த காரணத்தைக் கொண்டும் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவித்து இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என்றும் அறங்கூற்றுவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தினகரன் தரப்புக்கு இது இடைக்கால நிம்மதியளிக்கும் விசயமாக அமைந்துள்ளது.

இந்த வழக்கில் அரசு செயலர், கொறடா, பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.